இறந்த மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ்.வேலுசாமிக்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
மலேசியாவில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோ எஸ். சாமிவேலு உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். இவர் மலேசியா அமைச்சரவையில் 29 ஆண்டுகளாக அமைச்சராக பணி புரிந்தார். மேலும் கடந்த 1979-ஆம் ஆண்டு முதல் 2019-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வைத்தார். மேலும் அரசியலில் இருந்து மக்கள் சேவை ஆற்றியதோடு மட்டுமில்லாமல் 1963-ஆம் ஆண்டு மலேசியா வானொலி மற்றும் மலேசிய தொலைக்காட்சிகளில் பல ஆண்டுகளாக தமிழ் செய்தி அறிவிப்பாளராக பணி புரிந்தார்.
இதனையடுத்து பல மலேசிய தகவல் இளகாவில் நாடக கலைஞராகவும் விளங்கியுள்ளார். இவரின் மறைவுக்கு நமது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறியதாவது. இவரின் மறைவு மிகவும் வேதனை அளிக்கிறது. மேலும் இவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசியவால் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.