திரைத்துறையில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்ற பிரபலம் வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் கருப்பினத்தவரான சிட்னி பைய்டியர் என்ற பிரபல ஹாலிவுட் நடிகர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 1964 ஆம் ஆண்டு நடித்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதையும் வென்றுள்ளார்.
அதுமட்டுமின்றி இவர் பல ஹாலிவுட் படங்களில் நடித்து அமெரிக்காவில் மிகவும் புகழ் பெற்ற பிரபல நடிகராக வலம் வந்துள்ளார். இந்நிலையில் சிட்னி பைய்டியர் வயது முதிர்வு காரணமாக பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவருடைய இந்த மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.