10 க்கும் மேலான நூல்களை எழுதிய 16வது வயதில் துறவி பூண்ட வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 95 ஆவது அகவையில் காலமாகியுள்ளார்.
வியட்நாமை சேர்ந்த திக் நாட் ஹான் தனது 16 ஆவது அகவையில் துறவி பூண்டுள்ளார். இவர் வியட்நாம் போர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். மேலும் இவர் அமெரிக்காவிலுள்ள கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பௌத்தமதம் குறித்து போதித்துள்ளார்.
இதனையடுத்து அமெரிக்காவின் சமூக உரிமைப் போராளியான மார்ட்டின் லூதர் கிங்கை பௌத்த துறவியான திக் கடந்த 1964ஆம் ஆண்டு சந்தித்துள்ளார். அப்போது மார்ட்டின் லூதரை, அமெரிக்கர்கள் வியட்நாமில் செய்யும் கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்கும்படி திக் நாட் ஹான் கூறியுள்ளார்.
அவர் கூறியபடியே மார்ட்டின் அமெரிக்கர்களுக்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். இந்நிலையில் ஜென் பௌத்த துறவியான திக் நாட் ஹான் தனது 95 ஆவது அகவையில் கடந்த சனிக்கிழமையன்று காலமாகியுள்ளார். இவரது மறைவிற்கு தலாய் லாமா உட்பட உலகிலுள்ள அனைத்து துறவிகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்கள்.