மத்திய ஆப்பிரிக்க குடியரசு நாட்டில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கின்ற நாடு மத்திய ஆப்பிரிக்க குடியரசு. இந்த நாட்டை சுற்றியும் சாட், சூடான், தெற்கு சூடான், காங்கோ, கேமரூன் போன்ற நாடுகள் இருக்கின்றன. இதற்கிடையில், மத்திய ஆப்பிரிக்க குடியரசில் பல ஆண்டுகளாக அரசிற்க்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த கிளர்ச்சிக்குழுக்கள் அரசுப்படையினருக்கு எதிராக அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றன.இந்த நிலையில், அந்நாட்டின் பங்கஸ்சூவ் பகுதியில் ராணுவத்தினரை குறிவைத்து கிளர்ச்சியாளர்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது.
இந்நிலையில் இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 4 பேர் உயிரிழந்தனர். இந்த மோதலை தொடர்ந்து அந்தபகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது.