திருவெற்றியூர் கடலில் குளிக்க சென்ற போது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ராட்சத அலையில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் இரண்டாவது தெருவை சேர்ந்த கரீம் மொய்தீன் என்பவர் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் 9 பேர் ஒரு ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்களில் நேற்று காலை 9 மணி அளவில் திருவொற்றியூர் பலகை தொட்டிக்குப்பம் அருகே உள்ள கடலில் குளிக்க சென்றுள்ளனர். கடலில் ஒன்பது பேரும் குளித்து விளையாடிக் கொண்டிருந்த போது திடீரென தோன்றிய ராட்சத அலையில் அவர்களில் 4 பேர் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்களது உறவினர்கள் நான்கு பேரையும் காப்பாற்றும் படி கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மீனவர்கள் ஓடி வந்து கடலுக்குள் குதித்து ராட்சத அலையில் இழுத்து செல்லப்பட்ட ஆட்டோ டிரைவர் கபீர்(24), அம்ரின்(18), அவருடைய தம்பி ஆபான்(14), மற்றும் அவர்களது நண்பர் சபரி (16) கொஞ்ச நான்கு பேரையும் தேடி வருகின்றனர். இது குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீஸர் தீயணைப்பு படையினர் மற்றும் மெரினா சிறப்பு நீச்சல் படைவீரர்கள் கடலில் மாயமான நான்கு பேரையும் தீவிரமாக தேடி வருகின்றார்கள்.
மேலும் நான்கு பேரையும் விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்கும்படி தீயணைப்பு துறை மற்றும் போலீசாரிடம் அறிவுறுத்திய அவர் அவர்களுக்கு துணையாக உள்ளூர் மீனவர்களை 4 படகுகள் மூலமாக தேடவும் எந்த நேரத்திலும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் பற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.