மயங்கி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மட்டியான்திடல் பகுதியில் சண்முகம்நிதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மீனாட்சி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு 5 வயதில் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மீனாட்சிக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 2-வது குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அந்த குழந்தைக்கு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனால் மீனாட்சி அருகில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென மீனாட்சி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து மீனாட்சியின் அண்ணன் சண்முகநாதன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.