Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்… கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு…!!!!!

ஹைதராபாத்தில் நடந்த கார் விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாகியுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஹைதராபாத்தில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாநிலத்தில் உள்ள தூர்க பள்ளி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்தில்  காரில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சடலங்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதில் பலியானவர்களில் கவுஸ் கான் (55) சாதிக் (55) ஃபர்ஹானா(45)ரூஷன்(24) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சூரிய பேட்டை மாவட்டத்திலுள்ள நெடுரேடுசார்லாவை  சேர்ந்தவர்கள் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திராவின் கடப்பா  மாவட்டத்தில் உள்ள ஒரு தர்காவில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |