Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்!!…. சமாஜ்வாதி கட்சி தலைவர் மறைவு…. பிரதமர் மோடி இரங்கல்….!!!!

முலாயம் சிங் யாதவின்   மறைவு மிகவும் வருத்தம் அளிப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் உயிர் காக்கும் மருந்துகளை கொண்டு சிகிச்சை அளித்தும் அவரின் நிலைமை மோசமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில்  அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் இறப்பிற்கு பல மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சியினர், திரை பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து குடியரசு தலைவர் திரௌபதி முர்பு  கூறியதாவது.

அவசர நிலை காலத்தில் ஜனநாயகத்தின் முக்கிய வீரராக இருந்தவர் முலாயம் சிங் யாதவ். சாதாரண சூழலில் இருந்து வந்த அவரின்  சாதனைகள் அசாதாரணமானவை என குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பிரதமர் மோடி முலாயம் சிங்   யாதவுடன் இருக்கும் புகைப்படங்களை பிரதமர் மோடி கட்டுரையில்  பகிர்ந்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது. நாங்கள் இருவரும் முதல்வராக மாநிலங்களுக்கு சேவை செய்த போது பலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இதனால் அவருக்கும், எனக்கும் நெருங்கிய தொடர்பு நீடித்தது. இந்நிலையில் அவரின் பார்வைகளை அறிந்து கொள்ள எப்பொழுதும் ஆவல் இருக்கும் . ஆனால் இப்போது அவரின் மறைவு எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் என அதில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |