வைர சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கியதில் 40 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்பிரிக்க நாடான காங்கோவில் வைர சுரங்கம் ஒன்று செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வைர சுரங்கத்தில் தொழிலாளர்கள் வைரத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்து விழுந்து விட்டது. அந்த இடிபாடுகளில் தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த விபத்தில் 40க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு இருக்கின்றது. மீதமுள்ளவர்கள் உடலை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.