Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்….சார்தாம் யாத்திரை…. 203 பக்தர்கள் உயிரிழப்பு….!!!!!!!!

உத்தரகாண்டில் சார்தாம் யாத்திரை சென்ற 203 பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலைப் பகுதியில் உள்ள கோதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வருடம் சார்தாம் யாத்திரை கடந்த மே 3ஆம் தேதி அக்ஷய திருதியை அன்று தொடங்கியுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் கடினமான வானிலையில்  நடைபெறும் இந்த யாத்திரையின்  போது பக்தர்கள் பலர் உயிரிழந்து விடுவது வழக்கமாக இருக்கின்றது. அதனை கருத்தில் கொண்டு உத்ரகாண்ட் மாநில நிர்வாகத்தின் சார்பில் இந்த வருடம் யாத்திரை செல்லும் பக்தர்களுக்காக ஏர் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனாலும் கடுங்குளிர், உடல்நல பாதிப்பு காரணமாக கடந்த 26 ம் தேதி வரை 203 பக்தர்கள் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் வயதானவர்கள் எனவும் மாரடைப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் பக்தர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்படுவதாகவும் மாநில சுகாதார மந்திரி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |