Categories
உலக செய்திகள்

பெரும் சோகம்… சோவியத் யூனியன் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் காலமானார்…!!!!!!

சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர் மிக்கல் கோர்பசேவ் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக மிக்கல் கோர்பசேவ் இருந்துள்ளார். சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான இவர் சோவியத் யூனியனின் தலைவராக 1985 ஆம் வருடம் முதல் 1991 ஆம் வருடம் வரை யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்துள்ளார். அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவிற்கு வந்துள்ளது. மேலும் சோவியத் யூனியனிலிருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாக மாறியுள்ளது சோவியத் யூனியன் பொருளாதார மறைமுகமான பணவீக்கம் மற்றும் விநியோக பற்றாக்குறை போன்ற இரண்டாலும் பாதிக்கப்பட்டு இருந்தால் பெரெஸ்ட்ரோயிகா அல்லது மறு சீரமைப்பு என்னும் பொருளாதார சீர்திருத்த திட்டத்தையும் கோர்ப்பசேவ் தொடங்கியுள்ளார்.

மேலும் அவரது காலத்தில் பத்திரிக்கை மற்றும் கலை சமூகத்திற்கு கலாச்சார சுதந்திரம் அளிக்கப்பட்டது. அரசாங்க எந்திரத்தின் மீதான கட்சி கட்டுப்பாட்டை குறைக்கும் விதமாக தீவிர சீர்திருத்தங்களை அவர் செய்துள்ளார். மேலும் அவரது ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது எதிர்ப்பாளர்கள் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். 1990 ஆம் வருடம் இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வயது முதுமை உடல்நல குறைவு போன்ற காரணமாக மிக்கல் மரணம் அடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

Categories

Tech |