“ஜெராக்ஸ்” நிறுவனத்தின் சிஇஓ ஜான் விசென்ட் 59-வது வயதில் உயிரிழந்துள்ளர்.
ஒரு பேப்பரில் எழுதியவற்றை ஒளி நகல் இயந்திரத்தின் மூலமாக பல ஆயிரக்கணக்கான நகல்கள் எடுக்க முடியும். இந்த நகலை எடுப்பதற்காக ஒளியை பயன்படுத்துவதால், இது ஒளி நகல் இயந்திரம் என்று உலகெங்கும் அழைக்கப்படுகின்றது. இந்த வகையில் ஒளி நகல் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனங்களில் முதன்மையானது ‘ஜெராக்ஸ்’ ஆகும். ஜெராக்ஸ் என்பது ஒரு நிறுவனத்தின் பெயராகும். இந்த நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. பேப்பரில் எழுதியவற்றை ஒளி நகல் எடுப்பதை இந்தியாவில் ‘ஜெராக்ஸ்’ எடுப்பது என பெரும்பாலான மக்கள் கூறுகின்றனர்.
ஆனால், ஜெராக்ஸ் என்பதும் ஒளிநகல் இயந்திரத்தை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும். இதற்கிடையில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக சிஇஓ ஜான் விசென்ட் ஆவார். இவருக்கு வயது 59 ஆகிறது. இந்நிலையில், ஜெராக்ஸ் நிறுவன சிஇஓ ஜான் விசென்ட் நேற்று உயிரிழந்துள்ளார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளதாக ஜெராக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து இடைக்கால சிஇஓ-வாக ஸ்வீவ் பிராண்ட்ரோஸ்வ் நியமிக்கப்படுவதாக ஜெராக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.