பிரித்தானியாவின் மெர்சிசைட்டில் கரேன் டெம்ப்சே(55) என்ற பெண்ணை கத்தியால் குத்தி கொன்ற அவரது சொந்த மகன் ஜேமி டெம்ப்சே (32) போலீசாரால் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மெர்சி சைட்டில் கிர்க்பியல் உள்ள பிராம்பிள்ஸ் பப்பிற்கு வெளியே உள்ள கார் பார்க்கிங்கில் திங்கட்கிழமை அன்று ஜேமி என்ற நபர் தனது தாய் கரேன் டெம்ப்சேவை மார்பில் பலமாக தாக்கியிருக்கிறார். மார்பில் குத்தப்பட்ட காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரேன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த சூழலில் ஜேமி டெம்ப்சே,கரன் டெம்ப்சே வை உள்நோக்கத்துடன் தாக்கியதாக குற்றம் சாற்றப்பட்டு ஆகஸ்ட் 25ஆம் தேதி வியாழக்கிழமை மெர்சைட்டில் குடும்ப வன்முறை தடுப்பு நீதிமன்றத்தில் ஆசைப்படுத்துவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றார். மேலும் சம்பவ இடத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 38 வயதுடைய நபர் ஒருவரையும் போலீசார் விசாரணைக் உட்படுத்திருக்கின்றனர். ஆனால் ஜேமி தனது தாயை எதற்காக தாக்கினார் போன்ற தகவல்கள் கூறப்படவில்லை. இதனை தொடர்ந்து கரேன் டெம்ப்சேவின் பிரிவிற்கு அவரது குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தியிருக்கின்றனர். மேலும் போலீசார் விசாரணைகள் மற்றும் அவரது உயிரை காப்பாற்ற மிகவும் கடினமாக போராடிய அரசு சேவைகளுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் கூறியுள்ளனர்.