ஈரானில் ரெயில் தடம் புரண்டதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஈரான் நாட்டில் தெஹ்ரான் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியின் ரெயில்வே நிலையத்தில் இருந்து தபாஸ் நகரத்தை நோக்கி பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அப்பொழுது தபாஸ் நகரத்தில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் மஷாத் மற்றும் யாஸ்த் நகரங்களுக்கு இடையில் சென்றுகண்டிருந்தபோது திடீரென ரெயில் தடம் புரண்டது. இந்த ரெயிலில் 348 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நடந்த இடத்திற்கு மீட்புப் படையினர்கள் உடனடியாக வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். தற்போது பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்டவாளத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பள்ளம் தோண்டும் இயந்திரத்தில் ரெயில் மோதியதாகவும், இதன் காரணமாக ரெயில் தடம் புரண்டதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.