Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. திடீரென வீட்டில் இறந்து கிடந்த பெண்…. தீவிர விசாரணையில் காவல்துறையினர்….!!!!

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பனையூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் பிரியா தன்னுடன் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்த மதன்ராஜ் என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது பிரியா தனது கணவருடன் திருப்பூரில் வசித்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாக 2 பேருக்கும்  இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம்  தனது சகோதரி குழந்தை பிறந்த நாளுக்காக   திருப்பூரில் இருந்து வந்த  பிரியா தனது  மாமியார் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்போது மதன்ராஜ்க்கும் பிரியாவிற்கும் இடையே மீண்டும் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில்  சிறிது நேரத்தில் பிரியா மர்மமான முறையில் வீட்டில் இறந்து  கிடந்துள்ளார். இதுகுறித்து பிரியாவின் தாய் சுமதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த  புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மதன்ராஜை  கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வழக்கை உதவி ஆட்சியரும் விசாரித்து வருகிறார்.

Categories

Tech |