மேற்கு வங்கத்தின் மூத்த அமைச்சரான சாதன் பாண்டே உயிரிழந்துள்ளார்.
மூத்த திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்கத்தின் மூத்த அமைச்சருமான சாதன் பாண்டே, மும்பையில் உள்ள மருத்துவமனையில் காலமாகி உள்ளார். அவருக்கு வயது 71. இவர் 2011 ஆம் ஆண்டு வரை வடக்கு கொல்கத்தாவில் உள்ள பர்டோலா தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். பின்னர் மனிக்தலா தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓராண்டாக சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட அவர் உடல் நிலை, கடந்த சில நாட்களாக மோசமடைந்து வந்துள்ளது.இந்நிலையில் அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.