கேரள மாநிலத்தில் தொண்டையில் மாமிசத் துண்டு சிக்கி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் பெரிந்தல்மண் அருகே செத்தலூர் அமைந்துள்ளது. இங்கு ஆஷிக் என்பவர் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி பாத்திமா ஹானான் (வயது22). திருமணத்திற்குப் பின்பும் இவரது மனைவி பாத்திமா ஹானான் இங்கு உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று தனது கணவனுடன் வீட்டிலிருந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென அவருடைய தொண்டையில் ஒரு மாமிச துண்டு சிக்கியுள்ளது.
இந்த மாமிச துண்டு மூச்சுக்குழாயில் சிக்கியுள்ளதால் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டு இருக்கின்றார். உடனடியாக உறவினர்கள் பெரிந்தல் மண் நகரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அங்கு சிகிச்சை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து விவரமறிந்த செத்தலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.