தென்னிந்திய சினிமா உலகில் 90 காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். ஏற்கனவே நுரையீரல் தொடர்பான பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு சமீபத்தில் தான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மிகவும் கவலைக்கிடமான நிலைக்கு சென்ற அவருக்கு சென்னை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் மீனாவின் மகள் நைனிகா மற்றும் தாயார் ராஜ் மல்லிகா ஆகியோருக்கும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரைப் பிரபலங்கள் பலரும் இவரின் இறப்புக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.