Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்… “நாங்கள் என்ன செய்தோம்”…. உக்ரைன் வீரர்கள் கண்ணீர் மல்க கேள்வி….?

ரஷிய படைகள் எதற்காக பொதுமக்களை கொல்கின்றனர் என கவலையுடன் உக்ரைனியர்கள்  கேள்வி எழுப்பியுள்ளனர்.

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திவரும் போர் தொடர்ந்து 50-வது நாளாக நீடித்து வருகிறது. இதற்கிடையே இருதரப்பிலும் பொருட்சேதம் மற்றும்  உயிர் சேதம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் ரஷ்யப் படைகள் தாக்குதலில் உக்ரைனிய மரியு  போல் நகரம் பல சேதங்களை சந்தித்திருக்கிறது. குடியிருப்பு பகுதிகளும், வாகனங்களும்  வெடிகுண்டுகளுக்கு இறையாகி இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக 10 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து இருக்கிறது. இதில் இடிபாடுகளில் சிக்கி 19 பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் ரஷ்யப் படைகள் எதற்காக பொது மக்களைத் தாக்குகின்றன என கவலையுடன் உகிரைனியர்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஷ்ய படைகள் எதற்காக எங்களை கொல்கின்றீர்கள், நாங்கள் என்ன செய்தோம்? உங்களால் எங்களது வாழ்க்கையை இழந்து வருகிறோம் என கண்ணீர் மல்க உக்ரைனியர்கள்  கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |