நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
போலந்து நாட்டின் பாவ்லோவிஸ் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் நேற்று மதியம் 12 மணியளவில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 1000 மீட்டர் ஆழத்தில் உள்ள மீத்தேன் வாயு வெளியேறியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் அடுத்து இந்த வெடிவிபத்தில் சுரங்கத்தில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 19 பேர் படுகாயமடைந்தனர். மேலும் வெடிவிபத்தில் சிக்கிய 7 பேரை தேடும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்க 13 குழுக்கள் அமைக்கப்பட்டு மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.