Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…. படகில் ஏற்பட்ட தீ விபத்து…. 7 பேர் உயிரிழப்பு…!!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் படகில் தீ விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கியூசான்  மாகாணத்திலுள்ள ரியல் நகரத்தில் இருக்கும் துறைமுகம் நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் சுமார் 135 பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த படகின் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக  திடீரென தீப்பிடித்தது. இந்நிலையில் அதன்பின் தீயானது படகு  முழுவதும் பரவியதால் ஏற்பட்ட கரும் புகை காரணமாக பல பேர் மயங்கி விழுந்துள்ளனர்.

மேலும் பலர் உயிர் தப்பிப்பதற்காக கடலில் குதித்தனர். இந்த விபத்தில் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் சுமார் 120 பேர் மீட்கப்பட்டு இருக்கின்றனர். இந்தநிலையில் இந்த விபத்து பற்றி துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் படகில் இருந்தவர்களை மற்றொரு படகு மூலமாக மீட்டு கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் மயக்கம் அடைந்தவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்த விபத்தில் நான்கு பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |