அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
அருணாச்சலப் பிரதேசத்தில் கடந்த 6ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த 7 ராணுவ வீரர்கள் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமாகினர். தொடர்ந்து இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பனிச் சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து அவர்களின் உடல்களை பனிக் குவியலிலிருந்து மீட்டெடுக்கும் முயற்சியில் மீட்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.