மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரச்சேரி பகுதியில் வெளிநாட்டில் பணிபுரியும் பத்மதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் நேற்று தர்ஷினி வங்கிக்கு சென்று விட்டு நுள்ளிவிலை குருசடி சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி தர்ஷினியின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தர்ஷினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் லாரி ஓட்டுநரை மடக்கி பிடித்தனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தர்ஷினியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.