பிரபல சினிமா விமர்சகரும் வி.ஜெவும் ஆகிய கௌஷிக் நேற்று மாரடைப்பால் காலமானார். தற்போது இருக்கும் சோசியல் மீடியா உலகத்தில் சினிமா செய்திகள் உடனுக்குடன் அறிவிப்புகள் என ரசிகர்களுக்கு சினிமா சார்ந்த தகவல்களை பதிவிட்டு வருபவர் தான் கௌஷிக். இவர் சமூக வலைதளங்களில் தான் பதிவிடும் சுவாரசியமான தகவலின் மூலமாக பல ரசிகர்களை தன்னை பின்தொடர் செய்திருக்கின்றார். 35 வயதே நிரம்பிய கௌஷிக் நேற்று திடீரென மாரடைப்பால் காலமானது அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக இருக்கிறது.
அதாவது சுமார் 16 மணி நேரத்திற்கு முன்பு கூட துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்று இருக்கின்ற சீதாராமம் எனும் படத்தின் வசூலை பற்றி பதிவிட்டுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மறைந்தது அவரது குடும்பத்தார்களாளும், சினிமா ரசிகர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாக உள்ளது. இந்த நிலையில் அவரது நண்பர்கள் ஆன சக விமர்சகர்கள் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றார்கள்.
மேலும் இது தவிர பல சினிமா பிரபலங்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்திருக்கின்றனர். நடிகர் தனுஷ், துல்கர் சல்மான், கௌதம் கார்த்திக் என பலர் கௌசிக்கின் மறைவிற்கு தங்கள் வருத்தத்தை தெரிவித்து இருக்கின்றார்கள். சினிமாவை நேசிக்கும் ஒருவர் ரசிகர்களுக்கு சினிமா தகவல்களை உடனுக்குடன் பகிர்ந்து வந்த ஒருவர் திடீரென மறைந்து சம்பவம் சினிமா துறையை சார்ந்த அனைவரையும் சோகத்தில் ஆள் தீர்ப்பது குறிப்பிடத்தக்கதாகும்.