தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். கர்நாடகாவை சேர்ந்த அவரது மகளும் தற்போது சினிமாவில் நடிகையாக இருந்து வருகிறார். இந்நிலையில் அர்ஜுனின் அம்மா லக்ஷ்மி தேவி இன்று பெங்களூரில் காலமானார். அவருக்கு வயது 85. பெங்களூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். சில மாதங்களுக்கு முன்பு தான் அர்ஜுனின் மாமனார் நடிகர் ராஜேஷ் காலமானார், இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு துயரம் ஏற்பட்டு இருக்கிறது.
Categories