காஷ்மீரில் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் உள்ள ராம்நகரில் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. ராம்நகரில் உள்ள உத்தக் என்ற பகுதியில் இந்த விபத்து நடந்துள்ளது. அந்த பேருந்து கோகர்மார் பகுதிக்கு சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 25 பேர் படுகாயமடைந்தனர். இதில் 5 பேருக்கு மிகத் தீவிரமான காயங்கள் ஏற்பட்டிருக்கின்ற நிலையில், அவர்களை உத்தம்பூர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்ப மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து ராம்நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.