Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்… மலையாள பத்திரிக்கையாளர் தற்கொலை… அதிர்ச்சியில் உறவினர்கள்…!!!!

காசர்கோடு  வித்யா நகரை சேர்ந்தவர் ஸ்ருதி. இவர் ராய்ட்டர்ஸ்  செய்தி நிறுவனத்தில் மலையாள பத்திரிகையாளராக பணியாற்றி வந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.  பெங்களூருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் பெங்களூர்   அலுவலகத்தில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். பெங்களூருவில் உள்ள நல்லுர்ஹள்ளி மேபரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஸ்ருதி அவரது கணவர் அனிஸுடன்  தங்கியிருந்தார். இவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றிருக்கிறது.

இந்நிலையில் ஸ்ருதி இறந்துகிடந்த நாளில்அவரது கணவர் அனிஷ் தளிபரம்பை அருகே உள்ள சுழலி  வீட்டில் இருந்தார். இந்நிலையில் ஸ்ருதியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சாவில் மர்மம் இருப்பதாக  காவல்துறையில்உறவினர்கள்  புகார் அளித்துள்ளனர். காசர்கோடு வித்யா நகரில் உள்ள அவரது வீட்டில் சாலோ ரோடு  மயானத்தில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய பின் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.

Categories

Tech |