சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் இணைந்து இந்திய விடுதலைக்குப் போராடியவர் அஞ்சலை பொன்னுசாமி அம்மாள். மன உறுதி, வீரம், துணிச்சல் ஆகிய பண்புகளால் பெண் குலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர்.102 வயதான இவர் மலேசியாவில் நேற்றுமுன்தினம் காலமானார்.
இந்நிலையில் அவருடைய மறைவிற்கு பிரதமர் மோடி முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும் பல அவருடைய மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் .