மின்சாரம் தாக்கி தச்சுத்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டலம் கிராமத்தில் தச்சுத்தொழிலாளியான வீரமுத்து என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று கீழ்சாத்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளி வழியாக நடந்து சென்றுள்ளார். இந்நிலையில் வீரமுத்து செல்வராஜ் என்பவர் நிலத்தில் அருந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்துள்ளார். அப்போது மின்சாரம் வீரமுத்துவை தாக்கியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட வீரமுத்து சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரமுத்துவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பித்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.