Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் சோகம்!!…. மின்சாரம் தாக்கி “பலியான விவசாயி”…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

மின்சாரம் தாக்கி விவசாயி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சதுப்பேரிபாளையம் கிராமத்தில் விவசாயியான மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவியும், 2  மகள்கள் மற்றும் 1 மகன் உள்ளனர். இந்நிலையில் நேற்று காலை மணி தனது மாட்டை மேய்ச்சலுக்காக விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மாடு மிதித்துள்ளது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மணி மாட்டை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது திடீரென மணியை  மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட மணி சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனை பார்த்து அப்பகுதி மக்கள் உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகளுக்கு  தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை நிறுத்தி அருந்து  கிடந்த கம்பியை சீர் செய்துள்ளனர். அதன் பிறகு காவல்துறையினர் மணியின் சடலத்தை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |