மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலூர் கிராமத்தில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பர்களான முருகேசன், இளங்கோவன் ஆகியவர்களுடன் மோட்டார் சைக்கிளில் தஞ்சை-பட்டுக்கோட்டை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி திடீரென நிலைத்திடுமாறி இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முருகேசன், இளங்கோவன் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். மேலும் உயிருக்கு போராடிய தனபாலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே தனபாலும் உயிரிழந்து விட்டார் . இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் லாரி ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.