லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அடையப்புலம் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சமையல் மாஸ்டரான அழகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படிக்கும் ராகுல் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ராகுல் நேற்று இரவு அரணி- வேலூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது முன்னாள் சென்ற லாரி வேகத்தடை இருந்ததால் பிரேக் அடித்து நின்று கொண்டிருந்தது.
இதனை பாக்காமல் வேகமாக வந்த ராகுலின் மோட்டார் சைக்கிள் லாரியின் பின்னால் மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராகுலின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.