மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள புழல் காவாங்கரை கருப்பசாமி நகரில் அருண்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று பூஜா ஜி. என். டி. சாலையில் மோட்டார் சைக்கிளில் தனது கணவருடன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி நிலைதடுமாறி அருண்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பூஜா தன் கணவர் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
மேலும் காயம் அடைந்த அருண்குமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரி ஓட்டுநரான சக்திவேல் என்பவர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.