ஈரோடு மாவட்டம் டி என் பாளையம் அருகே உள்ள கொங்கர் பாளையத்தை அடுத்த கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த செந்தில் தனலட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த தம்பதியினர் தங்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்தனர். மேலும் அவர்கள் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் கடன் வாங்கிய விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்தும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததில் அவர்களுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் அவர்கள் அவதிப்பட்டு வந்திருக்கின்றனர். இதனால் கடந்த சில தினங்களாக தனலட்சுமி மனமுடைந்த நிலையில் காணப்பட்டுள்ளார். இந்த சூழலில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனலட்சுமி திடீரெனம் விஷத்தை குடித்து விட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்துள்ளார். இதனை கண்டு அங்கிருந்த செந்தில் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தனலட்சுமி மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் தனலட்சுமி உயிரிழந்துள்ளார். இது பற்றி பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.