வேன்மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வங்கி ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னிமலை ஊத்துக்குளி ரோட்டில் உள்ள எம்ஜிஆர் நகரை சேர்ந்த வேலுச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் பிரவீன் குமார். இவர் ஒரு தனியார் வங்கியில் ஊழியர் ஆக வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பிரவீன் குமார் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்னிமலை உள்ள ஊத்துக்குளி ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது மேலப்பாளையம் பகுதியில் ரோட்டோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வேன் மீது பிரவீன்குமார் ஒட்டி சென்ற மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதி உள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரவீன் குமாருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
அதன் பின் உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிரவீன் குமாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறையில் உள்ள ஐ ஆர் டி டி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அதன்பின் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனிற்றி நேற்று பிரவீன் குமார் உயிரிழந்துள்ளார். இது பற்றி சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.