பாகிஸ்தானில் 16 சதவிகிதம் மக்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ளதாக உணவு மற்றும் வேளாண் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூலை மாதம் முதல் பெய்துவரும் கனமழையின் காரணமாக பல்வேறு நகரங்களிலும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் நிவாரண முகாம்களுக்கு தஞ்சம் அடைந்துள்ளனர். அந்த நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெள்ள பாதிப்புக்கு பலியாகி உள்ளனர். இது தவிர தோல் நோய், மலேரியா பல்வேறு வியாதி தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் அடுத்த கட்ட நெருக்கடியை சந்திக்கும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர். அதாவது பாகிஸ்தானில் 15 முதல் 16 சதவிகித மக்கள் உணவு பாதுகாப்பின்மை நெருக்கடியை சந்திக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள் என அந்த நாட்டின் உணவு மற்றும் வேளாண்மைப்பு துணைத்தலைவர் பருக் தொய்ரோவ் கூறியுள்ளார்.
கொரோனா தொற்று சமீபத்திய வெள்ளம் போன்றவற்றால் பாதிப்புக்கு உள்ளான அந்த நாடு தெற்காசிய நாடுகளின் வரலாற்றில் உணவு நெருக்கடியால் மிகவும் மோசமடைந்த நாடு என்ற நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் பேசும் போது நாடு முழுவதும் 95 லட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களில் வெள்ள நீரில் மூழ்கி விட்டது 45 லட்சம் ஏக்கர் அளவிலான பயிர்கள் சேதம் அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார். சர்வதேச நட்பு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் அரசாங்கம் இணைந்து ஒத்துழைப்புடன் செயல்பட்டு நாட்டின் வறுமை பாதிப்பு உள்ளான நெருக்கடி சூழலை எதிர்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் உலக உணவு திட்டத்திற்காக பாகிஸ்தான் இயக்குனர் கிரிஷ் கையே பேசும்போது 82 நாடுகளைச் சேர்ந்த 34.5 கோடி மக்கள் உணவு பாதுகாப்பின் மேல் எதிர்கொண்டு வருகின்றனர் இந்த எண்ணிக்கை 2022 ஆம் வருடம் தொடக்கத்தில் 28.2 கோடியாக இருந்துள்ளது. இதனை அடுத்து கொரோனா பாதிப்புக்கு முன் இந்தஎண்ணிக்கை 13.5 கோடியாக இருந்தது வேளாண் உற்பத்தி திறனை அதிகரிப்பது என்பது பாகிஸ்தானுக்கு அதிக தேவையான ஒன்றாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.