Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 குழந்தைகளை கொன்றுவிட்டு போலீஸ்காரரின் மனைவி தற்கொலை….. பின்னணி என்ன…?

 குடும்ப தகராறு காரணமாக 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் கொல்லம் நகரில் வசித்து வருபவர் ரெனிஷ். இவரது  மனைவி நஜீலா(27). இவர்களுக்கு மகன் திப்பு சுல்தான்(5) மற்றும் மகள் மலாலா (11/2) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் ரெனீஸ் ஆலப்புழா காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் குடும்பத்துடன் ஆலப்புழா நகரில் உள்ள ஏ ஆர் கேம்ஸ் அருகே இருக்கும் காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று அதிகாலை வழக்கம்போல் வேலைக்கு சென்றிருக்கிறார். மதியம் 12 மணியளவில் தனது மனைவிக்கு அவர் போன் செய்து இருக்கிறார். ஆனால் மனைவியிடம் இருந்து எந்தவித பதிலும் வராததால் மீண்டும் மாலைநேரத்தில் போன் செய்துள்ளார். ஆனால் அப்போதும் மனைவியிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை. இதனால் உடனடியாக பக்கத்து வீட்டில் இருப்பவர்களை அழைத்து விசாரணை செய்யும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர்கள் சென்று பார்த்தபோது கதவு பூட்டி இருப்பதாகவும், எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளனர். இதனால்  உடனடியாக ரெனீஸ் வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது கதவு உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் ஆலப்புழா காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அவர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது நஜீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் காணப்பட்டிருக்கின்றார்.

மேலும் ஒரு துணியை பயன்படுத்தி திப்புசுல்தானின் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து மகளை பக்கெட்டில் உள்ள தண்ணீரில் முக்கி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இந்நிலையில் மூன்று பேரின் உடலையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில்  போலீசார் விசாரணை மேற்கொண்டபோது கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு நடைபெறுவது வழக்கம் என அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். இருப்பினும் போலீசார் தற்கொலைக்கு உண்மையான காரணம் என்ன என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |