Categories
தேசிய செய்திகள்

பெரும் சோகம்…. 2 மாடி குடியிருப்பில் தீ விபத்து…. 7 பேர் பலி…!!!!!!!!

 2 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடிரென்று  ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.

மேலும் 9 பேர் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து தகவல் எதுவும் தெரியவில்லை. இருந்த போதிலும்  மின் இணைப்பில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக  தீப்பற்றி பரவியிருக்கலாம் என கூறப்படுகின்றது. மேலும் இந்த தீயை அணைப்பதற்கு மூன்று மணிநேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடியதாக தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |