Categories
உலகசெய்திகள்

பெரும் சோகம்…4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை… வெளியான அறிக்கை தகவல்…!!!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள 4 ல் 3 மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகி இருக்கிறது என அறிக்கை ஒன்று தெரிவித்திருக்கிறது.

பாகிஸ்தான் நாட்டில்  கொரோனா பாதிப்பு, ஊரடங்கு கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் பொருளாதாரத்தில் மந்த நிலை ஏற்பட்டு மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் உலக அளவில் தண்ணீர் பற்றாக்குறையாக இருக்கின்ற நாடுகளின் வரிசையில் டாப் 10ல் பாகிஸ்தான் இருக்கின்றது. பருவகால மாற்றம், வெள்ளம், வறட்சி போன்றவை தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணம் என ஐநா பிரதிநிதி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் சர்வதேச உணவு நெருக்கடி பற்றிய அறிக்கை ஒன்று சமீபத்தில் வெளியாகியுள்ளது.அதில் பாகிஸ்தான் நாட்டில்  நான்கில் மூன்று மாகாணங்களில் உணவு பற்றாக்குறை உருவாகியிருக்கிறது  என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மேலும் உணவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு, வறட்சியான சூழ்நிலை, கால்நடை வியாதிகள் மற்றும் வேலைவாய்ப்பு இன்மை போன்றவற்றால் தேசிய அளவில் அந்த நாட்டில் உணவின் விலை அதிகரித்து இருக்கிறது. இதேபோன்று  பலுசிஸ்தான் மற்றும் மாகாணங்களில் வறட்சி நிலை ஏற்பட்டு தனிநபர் வருவாய் பெருமளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் மழை பொழிவு குறைவு, கால்நடை மற்றும் பயிர் உற்பத்தி குறைந்ததும் பாதிப்புக்கான காரணிகளாக இருக்கிறது. கைபர் பக்துன்குவா மாகாணத்திலும் இதே நிலை காணப்பட்டு வருகிறது. மேலும் தீவனப் பற்றாக்குறை, குறைவான அளவில் தண்ணீர் கிடைப்பது போன்றவற்றால் நிலைமை மிக மோசமாக உள்ளது என கூறப்பட்டு வருகிறது.

Categories

Tech |