Categories
தேசிய செய்திகள்

பெரும் தீ விபத்து… 7 பேர் பலி…. 5 பேர் கவலைக்கிடம்…. பரபரப்பு சம்பவம்….!!!!

தெலுங்கானா மாநிலம் ஜகந்ராபாத்தில் எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையம் அருகே ரூபி எலக்ட்ரிக் பைக் ஷோரூம் இல் ஏற்பட்ட தீ ,மேல் தளத்திற்கு பரவியதில் ஏழு பேர் உயிரிழந்தனர். ஏழாவது மேல் தளத்தில் விடுதி இருந்ததால் அங்கிருந்த பலரும் தங்கள் உயிரை காப்பாற்ற ஜன்னல் வழியாக கீழே குதித்தனர்.

அதில் பலத்த காயமடைந்த ஐந்து பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி  எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.இந்த விபத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த விபத்திற்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |