Categories
தேசிய செய்திகள்

பெரும் பயங்கரம்…. காதலியை பழிவாங்குவதற்காக இப்படியா….? வெளியான பகீர் உண்மை…!!!!!!!

உத்திரபிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் காதலியை பழிவாங்குவதற்காக காதலன் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் இந்தூரில் வான் பார்க் எனும் காலனி அமைந்துள்ளது. இங்குள்ள இரண்டு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென அதிகாலை தீப்பிடித்து உள்ளது. இந்த விபத்தில்  7 பேர் தீயில் கருகி உயிரிழந்திருக்கின்றனர்.இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். மேலும் குடியிருப்பு பகுதிகளில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆராய்ச்சி செய்தனர்.

அப்போது அதில் இளைஞன் ஓருவன் கட்ட பகுதிக்குள் நுழைந்து வேண்டுமென்றே பைக் நிறுத்தி வைக்கும் இடத்தில் தீ  பற்றவைக்கும் காட்சிகளை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அந்த இளைஞன் ஒரு குறிப்பிட்ட பைக்கில் தீ பற்ற வைத்துள்ளார். ஆனால் அது அங்கிருந்த அனைத்து வாகனங்களுக்கும் பரவி கட்டிடமே தீக்கிரையானது காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.இந்நிலையில்  தீவைத்த 27 வயதேயான சஞ்சய் என்ற ஷீபம் தீட்சித் என்ற இளைஞரை காவல்துறையினர் அடையாளம் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அந்த இளைஞர் தன் காதலியை பழிவாங்கும் எண்ணத்தில் தீ வைத்ததாக கூறியுள்ளார்.

அதாவது அந்த அடுக்குமாடி கட்டட குடியிருப்பில் வசித்து வரும் இளம் பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணிற்கு இவர் பண உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு திடீரென வேறு ஒருவருடன் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் நான் அந்த பெண்ணிடம் சண்டையிட்டேன்.மேலும்  எனது பணத்தையாவது  திருப்பி கொடு என கேட்டேன்.  ஆனால் அதற்கு அந்த பெண்ணும் அந்த பெண்ணின் அம்மாவும் சேர்ந்து என்னிடம் பதிலுக்கு சண்டையிட்டனர்.இதன் காரணமாகத்தான் நான் அந்தப் பெண்ணின் பைக்குக்கு தீ வைப்பதற்காக அதிகாலையில் வந்தேன். ஆனால் எதிர்பாராதவிதமாக தீ எல்லா  வாகனங்களிலும் பரவி கட்டடமே தீக்கிரையாகி உள்ளது என வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் கட்டடம் தீக்கிரையான போது அங்கு வசித்து வந்த அவரது காதலியும், காதலியின் அம்மாவும் தப்பித்து வெளியேறி விட்டனர். ஆனால் 2 கட்டிட தொழிலாளி, ஒரு கல்லூரி மாணவி, இரண்டு ஊழியர்கள், ஒரு வீட்டு வேலை செய்யும் பெண், மேலும் அந்தக் கட்டிடத்திற்கு புதிதாக வந்த ஒருவர் என மொத்தம் 7 பேர் இந்த தீ விபத்தில் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |