அண்ணனை கொலை செய்த தம்பியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடராஜபுரம் பகுதியில் தங்கபாண்டியன்-ஆறுமுகதாய் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு செல்லத்துரை, முத்துச்செல்வம் என்ற இரு மகன்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் செல்லத்துரை தினமும் மது குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். அதைப்போல் நேற்றும் மது குடித்துவிட்டு ஆறுமுகதாயிடம் பணம் கேட்டு தகராறு செய்து அவரை தாக்கியுள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த முத்துச்செல்வம் வீட்டிலிருந்த கட்டையை கொண்டு செல்லத்துரையை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த செல்லத்துரை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்லத்துரையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் முத்துச்செல்வத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.