ஆசிரியர் தாக்கியதில் தலித் சிறுவன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மில் உள்ள அரசு பள்ளியில் தலித் சிறுவன் ஒருவன் ஏழாம் வகுப்பு பயின்று வருகின்றான். அந்த சிறுவன் பள்ளியில் உள்ள ஆசிரியர் கேட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்க தவறியதாக கூறப்படுகின்றது. இதனால் அந்த மாணவனை பள்ளி ஆசிரியர் தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அந்த சிறுவன் மயக்கம் அடைந்திருக்கின்றான். உடனடியாக மாணவன் அங்கு உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றான். இந்த நிலையில் சிறுவனுக்கு வயிற்று வலி மற்றும் தலைவலி இருப்பதாக கூறியுள்ளான். ஆனால் பெரிய காயம் எதுவும் ஏற்படவில்லை. சிறுவனின் நிலை சீராக இருக்கிறது எனவும் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை. தேர்வு தாளை தாமதமாக சமர்ப்பிப்பதற்காக அந்த ஆசிரியரால் மாணவன் தாக்கப்பட்டான் என பெற்றோர்கள் தெரிவித்தார்கள். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பல்வேறு தலித் அமைப்பினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றார்கள். இதனை அடுத்து குற்றம் சாட்டப்பட்ட அசோக் மாலை கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் சுரானா கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் இந்திரகுமார் மேக்பால் என்ற தலைப்பில் சிறுவன் படித்து வந்திருக்கின்றான். 9 வயதான அந்த சிறுவன் பள்ளியில் உள்ள தண்ணீர் பானையில் இருந்து தண்ணீர் குடித்ததனால் பள்ளி ஆசிரியர் அவனை தாக்கியதாக கூறப்படுகின்றது. அதில் படுகாயம் அடைந்த சிறுவன் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனில்லாமல் ஆகஸ்ட் 13ஆம் தேதி அவன் உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் நாடு முழுவதும் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் இதே போன்ற மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.