Categories
தேசிய செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. ஆட்டோ குண்டுவெடிப்பு விவகாரம்…. தொடர்ந்து வெளியாகும் அதிர்ச்சிகள்…..!!!!!

குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள நாகுரி பகுதியில் நேற்று மாலை ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த ஆட்டோவில் இருந்த மர்ம பொருள் திடீரென வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் உள்ளிட்ட 2  பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஆட்டோவில் வெடிப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டபோது விபத்து ஏற்பட்டதா? அல்லது ஆட்டோவில் இருந்த குக்கர் வெடித்ததால் தீப்பிடித்ததா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆட்டோவில் மர்ம பொருள் வெடித்த விவகாரம் விபத்து அல்ல என கர்நாடகா டிஜிபி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்  கூறியதாவது. இந்த செயல் தற்செயலாக நடைபெறவில்லை. பெரிய பயங்கரவாத  அமைப்பு தயாரானதற்கான அடையாளம் போல் தெரிகிறது. மேலும் மத்திய அரசின் விசாரணை ஆணையங்களுடன்  போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்  ஆட்டோவில் இருந்த அடையாள அட்டையை பறிமுதல் செய்து போலீசார்  விசாரணை நடத்தினர். அதில் ஆட்டோ பயணி கர்நாடகாவில்  உள்ள ஒரு மாவட்டத்தை  சேர்ந்த ஒருவருடைய ஆதார் அட்டையை திருடி அதனை பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இந்திய ரயில்வேயின் துமகுரு மண்டல ரயில்வே பணியாளர் பிரேம் ராஜ் என்பவரின் ஆதார் அட்டை 2  ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துள்ளது. மேலும் அவர் தான் தனது அட்டையை தொலைத்த இடம் தெரியும் எனும் கூறியுள்ளார். இது பற்றி பிரேம்ராஜ் கூறியதாவது.

காவல் துணை ஆய்வாளர்  என்னை தொலைபேசியில் அழைத்தார். பின்னர் நீங்கள் உங்கள் ஆதார் அட்டையை எங்கு தொலைத்தீர்கள் என்று கேட்டார். மேலும்  என்னுடைய பெற்றோர் விவரம் உள்பட எல்லா விவரங்களையும்  கேட்டார். அவர் கேட்ட அனைத்தையும் நான் கொடுத்து விட்டேன். இந்நிலையில் எனக்கு போலீசார் தகவல் கூறிய பின்பு தான் இந்த வெடி விபத்து சம்பவம் தெரியும். அதில் எனக்கு எந்த ஒரு தொடர்பும் கிடையாது. ஆனால் எனது ஆதார் அட்டை மங்களூரு  பகுதியில் இருந்து கிடைத்தது. மேலும் ஆதார் அட்டை தொலைந்து  உண்மை. ஆனால் அவரிடம் ஆதார் அட்டையின் ஐடி இருந்துள்ளது. அதனைக் கொண்டு மற்றொரு  நகல் எடுத்துள்ளார். இதனால் அது தொலைந்தது பற்றி புகார் அளிக்கவில்லை.

இந்த அளவுக்கு தவறாக பயன்படுத்தப்படும் என எனக்கு தெரியாது என கூறியுள்ளார். இந்நிலையில் குற்றவாளி சிகிக்சை பெற்று வருவதால்   போலீசாரிடம் பேச முடியவில்லை. மேலும் அந்த குற்றவாளி போலி ஆதார் அட்டை, போலியான முகவரி, போலியான பெயர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகத்திற்குரிய அந்த நபர் கோவையில் இருந்து போலியான பெயரில் சிம் கார்டு வாங்கியுள்ளார். மேலும் செல்போன் டவர் சிக்னலின் படி அந்த நபர் தமிழகத்திற்கு பயணித்துள்ளார். ஆனால் அவர் யாரிடம் எல்லாம் செல்போன் மூலம்  தொடர்பு கொண்டு பேசியுள்ளார் என்ற விவரங்களை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள அவரது கூட்டாளிகளை கண்டறியும் முயற்சியும்  நடந்து வருகிறது என அவர் கூறியுள்ளார்

Categories

Tech |