மாணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நிகில் என்ற மாணவன் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவன் திடீரென விடுதியில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மாணவனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் மாணவன் தற்கொலை செய்வதற்காக ஆன்லைன் மூலம் விஷம் வாங்கியது தெரியவந்துள்ளது