திருவாரூர் மாவட்டம் திருவாதிரைமங்கலம் பகுதியைச் சேர்ந்த சங்கவி என்பவர் வசத்து வருகிறார். இல்லம் தேடி கற்பித்தல் திட்டத்தில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர் தனது வீட்டிலேயே மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றார். இந்த சூழலில் நேற்று கல்வி கற்க சென்ற குழந்தைகள் சங்கவி வீட்டில் பின்புறத்தில் உள்ள கழிவறைக்கு சென்றிருக்கின்றார்கள். அப்போது கழிவறையில் உள்ள மின்சார ஓயர் அறுந்து அங்கிருந்த கம்பி வேலியில் உரசி கொண்டிருந்தது. இதனை கவனிக்காத குழந்தைகள் நான்கு பேர் கம்பி வேலியைச் தொட்ட போது மின்சாரம் தாக்கி காயம் அடைந்திருக்கின்றனர்.
இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் உடனடியாக நான்கு குழந்தைகளையும் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருக்கின்றனர். மேலும் அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள். இது பற்றி வைப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.