அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்றில் எஞ்சின் முடியில்லாமல் பறந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அலையன்ஸ் ஏர் விமானம் ஒன்று மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து குஜராத் மாநிலம் புஹூஜ் நகருக்கு இன்று 70 பயணிகளுடன் புறப்பட்டது. இதில் விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது ஓடுதளத்தில் ஏதோ ஒரு பொருள் விழுந்துள்ளது. இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்த விமானிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த விமானத்தில் இருந்த விமானி ஒரு பிரச்சினையும் இல்லை அனைத்தும் சரியாக உள்ளது எனக் கூறி விமானத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் விமானம் புஹூஜ் விமான நிலையத்தில் பத்திரமாக தரை இறங்கியது. அதன் பின்னர் விமானத்தை ஆய்வு செய்த ஊழியர்கள் விமானத்தில் மூடி இல்லாமல் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். மும்பையில் இருந்து புறப்படும்போதே விமானத்தின் என்ஜின் மூடி கழண்டு விழுந்து உள்ளது.
ஆனால் அதனை கவனிக்காமல் விமானி விமானத்தை மும்பையிலிருந்து புஹூஜ் வரை இயக்கியுள்ளார். இச்சம்பவம் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இது பற்றி விரிவான விசாரணை நடத்த விமான போக்குவரத்து கழகம் உத்தரவிட்டது. விமானம் பறப்பதற்கு முன்பே ஆய்வு செய்த அதிகாரிகள் எஞ்சின் மூடி பகுதி சரியாக பொருத்தபடாமல் இருப்பதை எப்படி கவனிக்காமல் விட்டனர் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்று வருகிறது.