குடித்துவிட்டு சாலையில் ரகளை செய்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி பகுதியில் ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது. இந்த ஓட்டலின் உரிமையாளர் நேற்று சாலையில் மது குடித்துவிட்டு அதே பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையத்தில் நின்ற பயணிகளிடம் ரகளை செய்துள்ளார். மேலும் தகாத வார்த்தை பேசியுள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த நபரை தடுத்துள்ளனர். ஆனால் அவர் காவல்துறையினரிடமும் அவதூறாக பேசியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அந்த நபரை அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். இதனால அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பதிக்கப்பட்டுள்ளது.