சாலையில் கவிழ்ந்த லாரியை தீயணைப்பு வீரர்கள் கிரேன் இயந்திரம் மூலம் மீட்டுள்ளனர்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கோவை-பாலக்காடு சாலையில் வெளி மாநிலத்தில் இருந்து எரி சாராயம் ஏற்றிக்கொண்டு 4 லாரிகள் வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த எரி சாராயம் சாலையில் ஆறாக ஓடியது. இந்நிலையில் பின்னால் வந்த மற்றொரு லாரியும் கவிழ்ந்து கிடந்த லாரியின் மீது மோதியது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த லாரி ஓட்டுநர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிரேன் இயந்திரம் மூலம் சாலையில் கவிழ்ந்த லாரியை மீட்டுள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.