Categories
மாநில செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. சென்னையில் டீசல் பற்றாக்குறை….. ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் வாகன ஓட்டிகள் ….!!!!

பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு டீசல் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

சென்னை மாவட்டத்தில் உள்ள எழும்பூர், நுங்கம்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பாரத் பெட்ரோலிய  நிலையங்கள் உள்ளது.  இந்த நிலையங்களில் தினம் தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து தங்களது வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரொல் போட்டு விட்டு செல்கின்றனர். அதேபோல் நேற்றும் டீசல் போடுவதற்காக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்துள்ளனர். இந்த நிலையங்களில்  டீசல் இல்லை என்று பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால்  வந்த  வாகன ஓட்டிகள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இந்நிலையில் பல்வேறு பாரத் பெட்ரோலிய  நிலையங்களில் நேற்று காலை முதல் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதனால் சில நிலையங்களில் டீசல் இல்லை  என்று அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய வணிக வளாகங்களுக்கு டீசல் தேவைப்படும் நிலையில் திடீரென இப்படி டீசல் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பது வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |